கனகராயன்குளத்தில் துவிச்சக்கரவண்டி- மோட்டர் சைக்கிள் விபத்து: ஒருவர் மரணம்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் துவிச்சக்கர வண்டியும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கனகராயன்குளம் குறிசுட்டகுளம் சந்திக்கருகில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டார் வண்டியும், துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது துவிச்சக்கர வண்டியில் சென்ற குறிசுட்டகுளத்தில் வசித்து வரும் இராசரத்தினம் பாலசிங்கம் (வயது 62) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வண்டியில் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like