கிளிநொச்சியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணி என்ன?

கிளிநொச்சியில் இராணுவத்தினர் இருவரை வெட்டிய சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.

கிளிநொச்சி, முருகண்டி இராணுவ முகாமில் உதவி சேவைகளுக்காக இணைக்கப்பட்ட இரு தமிழ் இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த இரு சிப்பாய்களும் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற வேளையில், ஊற்றுப்புலம் பிரதேசத்தின் கடை ஒன்றிற்கு அருகில் சில இளைஞர்களுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

வாய்த்தகராறு முற்றிய நிலையில் இராணுவத்தினர் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலின் பின்னர் கூர்மையான ஆயுதத்தில் வெட்டியுள்ளமையினால் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் 6 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like