வவுனியாவில் விஷேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் : 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

வவுனியாவில் இன்று (26.08.2017) காலை 10.30மணிக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.லவன் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், இராசேந்திரகுளம் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள், நகரசபை ஊழியர்கள் ஒன்றினைந்து வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பினைக்கட்டுப்படுத்தும் விஷேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாக இச் செயற்றிட்டம் மாலை 4மணிவரை இடம்பெறவுள்ளது.

வவுனியா நகரிலுள்ள டெங்கு பெருகும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழித்தல், மேலும் டெங்கு நுளம்பு பெருக்கத்தினை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளல், தமது இருப்பிடங்களை துப்பரவு பணிகள் மேற்கொள்ளாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளனர்.

You might also like