கிளிநொச்சி பொதுச்சந்தை பகுதியில் துர்நாற்றம் – விசனம் தெரிவிக்கும் மக்கள்

கிளிநொச்சி பொதுச்சந்தை பகுதியில் நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி பொது சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகள் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. அந்த பகுதியில் புதிதாக மலசல கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், அது பாவணைக்கு கையளிக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதிக்கு வரும் வர்த்தகர்கள், அங்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சுகாதார சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும், துர்நாற்றத்திலிருந்து பொதுச் சந்தை விடுபடவில்லை.

இவ்வாறான நிலையில் தொற்று நோய்களுக்கும் மற்றும் சுவாச நோய்களுக்கும் மக்கள் ஆளாகும் முன்னர், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

You might also like