வவுனியாவில் வசதியற்றவர்களுக்கு வழங்குவதற்கு கொண்டு வந்த பொருட்கள் மாயம்

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் செயற்படும் கிறிஸ்தவ போதகர் ஒருவர் தனது காரியாலயத்தில் வசதியற்றவர்களுக்கு கிறிஸ்மஸ் தினத்தில் கொடுப்பதற்காக வெளிநாடு ஒன்றிலிருந்து கொண்டு வந்து வைத்த பொருட்களைக் காணவில்லை என்று கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 17ஆம் திகதி கனகராயன்குளம் பகுதியில் தனது அலுவலமாக செயற்பட்டு வந்த காரியாலயத்தில் ஒரு லட்சம் பெறுமதியான வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உடுதுணிகள் ஆண்கள், பெண்களுக்காக இப்பகுதியில் வசதியற்றவர்களுக்கு பல வருடங்களாக குறித்த கிறிஸ்தவ போதகர் இவ்வாறு வழங்கி வருகின்றார்.

இவ்வருடம் கிறிஸ்மஸ் தினத்திற்கென கொண்டு வரப்பட்டு பொதி செய்யப்படவிருந்த நிலையில் முறிகண்டி பகுதியிலுள்ள பெண்மணி ஒருவர் போதகருக்கு நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இதையடுத்து போதகர் வவுனியாவிலிருந்து சென்று வருவது தாமதமாகின்ற படியால் காரியாலயத்தின் திறப்பினை தன்னிடம் தருமாறும் தான் நேர காலத்துடன் சென்று குறித்த பொருட்களை பொதி செய்து தருவதாகவும் தெரிவித்ததையடுத்து, போதகர் அலுவலக சாவியினைக் அவரிடத்தில் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அங்கு வைக்கப்பட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளது. குறித்த பெண்மணியிடம் வினவிய போது தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போதகர் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினம் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கனகராயன் குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like