கிளிநொச்சியில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் மீது, உழவு இயந்திரத்தில் வருகைதந்த ஒருவர் வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

53 வயது மதிக்கத்தக்க காந்தி கிராம பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இதன்போது வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like