வவுனியா ஓமந்தையில் கோர விபத்து : இரு சிறுவர்கள் உட்பட ஜவர் படுகாயம்

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் இன்று (28.08.2017) அதிகாலை 12.25மணியளவில் முச்சக்கரவண்டி – சொகுசு வான் விபத்தில் 5பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம் (27.08.2017) முல்லைத்தீவில் உறவினர் வீட்டில் இடம்பெற்ற நிகழ்விற்குச் சென்றுவிட்டு இரவு வவுனியாவிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் இன்று (28.08.2017) அதிகாலை 12.25மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்ததுடன் முச்சக்கரவண்டியில்  பயணம் மேற்கொண்ட மலையாண்டி செல்வகுமார் (43வயது), செல்வகுமார் லக்சன் (வயது 13), செல்வக்குமார் டிலக்சன் (வயது 11), ஜெயச்சந்திரன் றோசான் (வயது 16), லோகநாதன் டிலக்சன் (வயது 14) ஆகிய ஜந்து பேரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது விசாரணைகளுக்காக சொகுசு வாகனத்தின் சாரதி ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like