வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (28) காலை 9.30மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 230கிராம் கேரளா கஞ்சாவினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாகவும்,

கைது செய்யப்பட்ட நபர் ஜோசப் மைக்கல் திருகோணமலையைச் சேர்ந்த 48வயதுடையவர் என்றும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

You might also like