மகனை தூக்கிலிட்டு கொன்று விடுங்கள்! பொலிஸாருக்கு கடிதம் எழுதிய தாய்

பாடசாலை மாணவி ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தனது மகனை தூக்கிலிட்டு கொன்று விடுமாறு சந்தேகநபரின் தாய் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சந்தேகநபரின் தாய் குசுமாவதி, கல்கமுவ உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தை கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்துக்கு முன்னால் வாசிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவ்வாறான ஒரு குற்றவாளிக்கு தாயாக இருப்பதையிட்டு மன வேதனை அடைகின்றேன். அத்துடன், உயிரிழந்த மாணவியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.

எவ்வாறாயினும், இந்த குற்றத்தை புரிந்த தனது மகனை தூக்கிலிட்டு கொன்றாலும் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்கமுவ, கிரிபாவ – அசோகபுர பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 36 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like