வவுனியாவில் ரெலோ கட்சியினரால் புதிய வடமாகாண சுகாதார அமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு

வட மாகாண புதிய சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் வைத்தியர் ஜீ.குணசீலனுக்கு இன்றைய தினம் (29.08.2017) காலை 10.30 மணியளவில்  ரெலோ அலுவலகத்தில் சிறப்பு  வரவேற்பளிக்கப்பட்டது.

ரெலோ கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து வடமாகாண அமைச்சர் குணசீலனை வரவேற்றனர். தொடர்ந்து வடமாகாண அமைச்சருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டு   இதன்போது பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்­வில் ரெலோ கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், இளைஞர்கள் உட்­பட பலர் கலந்து கொண்­ட­னா்.

இந் நிகழ்வு ரெலோ அலுவலகத்தில் நடைபெற்ற போதும் கட்சியின் தலைவர், செயலாளர் ஆகிய முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like