99 வயதில் அனைவரையும் பிரமிக்க வைக்கும் இலங்கை பாட்டி!

மிகவும் வயதான காலத்திலும் தேயிலை கொழுந்து பறித்து தோட்ட வேலைகளை ஆரோக்கியமாக செய்து வரும் மூதாட்டி தொடர்பான தகவல் பதிவாகியுள்ளது.

காலி, நெழுவ, அம்புல்கெதர கிராமத்தில் வாழும் 99 வயதுடைய 5 பிள்கைளின் தாய் ஒருவர் தனது தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து தோட்ட வேலைகளை ஆரோக்கியமாக செய்து வருகிறார்.

1918ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15ஆம் திகதி ஹினிதும்பத்து, ஓபான பிரதேசத்தில் பிறந்த அவரது பெயர் லீலாவத்தி என குறிப்பிடப்படுகின்றது.

1940ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி நெழுவ, பிரதேசத்தை சேர்ந்த எதிரிசிங்க பீட்டர் என்பவரை அவர் திருமணம் செய்த நிலையில் அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளது. குறித்த 5 பிள்ளைகளும் 31 பேர குழந்தைகளின் பராமரிப்பில் அவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார்.

கடந்த 15ஆம் திகதி அவரது பிறந்த நாள் இடம்பெற்றுள்ள நிலையில், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளினால் அவரது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

எங்கள் குடும்பத்தில் சகோதரர்கள், சதோரிகள் 5 பேர் உள்ளனர். தற்போது இரண்டு சகோதரிகள் மாத்திரமே உயிருடன் உள்ளனர். 6ஆம் வகுப்பு மாத்திரமே கல்வி கற்றுள்ளேன்.

1940 ஆம் ஆண்டில் எதிரிசிங்க பீட்டர் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 5 பிள்ளைகள் உள்ளது நான் இன்னமும் ஆரோக்கியமாக உள்ளேன் என மூதாட்டி குறிப்பிட்டுள்ளார்.

You might also like