வவுனியா ஏ9 வீதியில் இ.போ.ச பேரூந்து – கார் விபத்து

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (29.08.2017) மாலை 5.30மணியளவில்  இ.போ.ச பேரூந்து – கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 5.30மணியளவில் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி புறப்பட்ட இ.போ.ச பேரூந்து வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து ஏ9 வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் முதலாம் குருக்குதெரு வீதியிலிருந்து ஏ9 வீதிக்கு ஏற முற்பட்ட கார் இ.போ.ச பேரூந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like