இரண்டு வேளை சாப்பிடுவதற்கே நெருக்கடி நிலை – கிளிநொச்சி மக்கள் கவலை

கிளிநொச்சியின் பெரும்பாலான கிராமங்களில் இரண்டு வேளை சாப்பிடுவதற்கே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக பொன்னகர் மத்தி, அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எப்பொழுதும் உரிமை உரிமை என பாலர் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்களின் வறுமையை நீக்கி அவர்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் வழி செய்ய வேண்டும்.

இவர்கள் உரிமையை பெற்றுத் தருகின்ற நேரத்தில் நாங்கள் உயிரோடு இருப்போமா என்ற நிலையில், தற்போது எமது மாவட்டத்தில் வறுமை தலைவிரித்தாடுகிறது.

தற்போது இரண்டு வேளை சாப்பிடுகின்ற நாம் இனி வரும் நாட்களில் ஒரு வேளை உணவு என்ற நிலை வரும் முன்னர் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி தாருங்கள்.

கடந்த காலங்கள் போன்று போதியளவு தொழில் வாய்ப்புகள் இன்மையால் மக்கள் இரண்டு வேளை சாப்பிடுவதற்கே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

You might also like