கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினத்தை முன்னிட்டு பேரணி

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பேரணி இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து மாவட்டச் செயலகம் வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களது உறவுகள் தொடர்பில் இதுவரை எந்தப் பதில்களும் வழங்கப்படாத நிலையில் 192 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, சர்வதேச நாடுகளை சேர்ந்த புலம்பெயர் உறவுகளும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த போராட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் நாடாளுமன்றஉறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா எனப் பலரும் கலந்து னொண்டுள்ளனர்.

You might also like