கிளிநொச்சியில் துரிதப்படுத்தப்படும் டெங்கு நோய்காவி நுளம்புகளை அழிக்கும் வேலைத்திட்டம்

வட்டக்கச்சி – மாயவனூர் பகுதியில் 200 மீற்றர்கள் இடைவெளிக்குள் மூன்று டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் காணப்படும் டெங்கு நோய்காவி நுளம்புகளை அழிப்பதற்காக விசேட வேலைத் திட்டங்கள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விழிப்புணர்வு மற்றும் அபாயத் தவிர்ப்பு நடவடிக்கைகளில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 831 பொதுமக்கள் டெங்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

You might also like