கிளிநொச்சி படைவீரர் நினைவுத் தூபியை அகற்றுமாறு கோரிக்கை

கிளிநொச்சி படைவீரர் நினைவுத் தூபியை அகற்றுமாறு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் அருமைநாயகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்றின் ஊடாக கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்ட இணைப்புக் கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் இது தொடர்பில் யோசனை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், இராணுவ நினைவுத் தூபியை அகற்ற வேண்டுமென முன்வைத்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபி நல்லிணக்கத்திற்கு தடையாக அமைந்துள்ளதாக ஜனாதிபதிக்கு மாவட்டச் செயலாளர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

You might also like