வவுனியா உதயா நகைக்கடை உரிமையாளருக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தியதாக இணையத்தளத்திற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

வவுனியாவில் இயங்கிவரும் பிரபல நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆதாரமற்ற குட்டச்சாட்டுகளை முன்வைத்து இரண்டு இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்ட செய்திக்கு எதிராக குறித்த நகைக்கடை உரிமையாளரினால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்தசில நாட்களுக்கு முன் பாடசாலை அதிபர் ஒருவர் தரம் 1 ௦ மாணவியுடன்  தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பாக வெளிவந்த செய்தியுடன் குறித்த நகைக்கடையின் உரிமையாளரை தொடர்புபடுத்தி அவரது பெயரையும்  நகைக்கடையின் பெயரையும்  தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளதன் மூலம் தனது பெயருக்கும் வியாபாரத்திற்க்கும் பங்கம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறியே இவ் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளங்கள் இலங்கை அரசின் ஊடக அமைச்சுக்குள் பதிவு செய்யப்படாது வெளிநாட்டில் இருந்து இயக்கப்படுவதனால் குறித்த  இணையத்தளங்களை  முடக்க கோரியும் வவுனியாவில் இருந்து  அவற்றிற்கு  செய்தி அனுப்பிய மினன்சல் முகவரிக்குரியவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியுமே  முறைப்பாட்டாளரினால்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

வவுனியாவில் தன்னுடன் தொழில் போட்டி மற்றும் கொடுக்கல் வாங்கள்  பிணக்குகளின் பின்னணியில் இந்த செய்தி வேண்டுமென்றே  சோடிக்கப்பட்ட செய்தி என குறிப்பிட்ட குறித்த நகைக்கடை உரிமையாளர் இந்த செய்தியினை அனுப்பியவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும்  அந்த செய்தியை முகநூல்களில் பகிர்ந்தவர்கள்களின் பெயர்களையும் குறிப்பிடுள்ளதாகவும் காவல்த்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

You might also like