வவுனியாவில் இரு சகோதரர்களின் விளையாட்டு வினையானது : பொலிஸார் விஜயம் ( படங்கள்)

வவுனியா பாரதிபுரம் ஜம்பதாவது வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்துவரும் ஒரே குடும்பத்ததைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் விளையாட்டிற்கு மரத்தில் கயிறுனைப் போட்டு கழுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் இருவரின் கழுத்தில் கயிறு இறுக்கி கழுத்தில் காயங்களுடன் அயலவர்களின் உதவியுடன் இன்று மாலை 5.30மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பாரதிபுரம் ஜம்பதாவது வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்துவரும் குறித்த சகோதரர்கள் இருவரின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்னாக பணியாற்றி வருகின்றார் தந்தை வேலைக்குச் சென்றுள்ளார். இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்கள்.

இன்று மாலை இருவரும் மரத்திற்கு கயிறுபோட்டு அதனை தமது கழுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கயிறு கழுத்துப் பகுதியில் இறுகி இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது குறித்த சிறுவர்கள் இருவர்களின் கூக்குரலினையடுத்து அயலில் உள்ளவர்கள் சென்று இருவரையும் மீட்டனர்.

12 மற்றும் 13வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது விபரீதத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நியுஸ்வன்னி செய்திகளுக்காக துசி

You might also like