வவுனியா ஆலய நகைகள் வங்கியில் வைப்பிலிட வேண்டும் : கலாச்சார  உத்தியோகத்தர்

வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலய பரிபாலனசபையினருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆலய நிர்வாகத்தில் வேறு அமைப்புக்கள் குறிப்பாக கிராம அபிவிருத்திச்சங்கம், மகளிர் அபிவிருத்திச்சங்கம் போன்ற அமைப்புக்கள் தலையிட முடியாது . அதேநேரம் ஆலய நகைகள் ஆலய அர்ச்சகரிடமிருந்து பெறப்பட்டு வங்கியில் வைப்பிலிடுதல் வேண்டும் எந்த ஒரு முடிவுகளையும் ஆலய நிர்வாகசபையினர் எடுக்க முடியும் அதேபோல  ஆலய யாப்பின்படி இரண்டு வருடத்திற்கு நிர்வாக சபை செயற்பட தவறின் ஆலய பதிவுகள் தொடர்பாக மீள் பரிசீலினை செய்யப்படும் என்று தனது கடிதத்தில் ஆலய பரிபாலனசபையினருக்கு இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எஸ். குகனேஸ்வரசர்மா தெரிவித்துள்ளார்

You might also like