முல்லைத்தீவில் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான விசேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் பிரதமநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடமாகாணசபை பிரதி அவைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலின்போது வறட்சி நிலவும் பகுதிகளுக்கான குடிநீர்வசதிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like