வவுனியா சரவணா சில்கஸ் ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து : வெளியானது காரணம்

வவுனியா பசார் வீதியில்  அமைந்துள்ள சரவணா சில்கஸ் ஆடை விற்பனை நிலையத்தின்  இரண்டாம் மாடியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இன்று (01.09.2017) காலை 10.00மணியளவில் ஏற்பட்ட தீடிர் தீவிபத்தில் பல லட்சம் பெருமதியான பொருட்கள் சேதம்

இவ் தீ விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையமான சரவணா சில்க்ஸ் விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலையில் காலை 10.00மணியளவில் தீவிபத்து ஏற்ப்பட்டுள்ளது. உடனடியாக வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினரும் வவுனியா பொலிஸாரும் இணைந்து சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இத் தீ விபத்து கட்டிடத்தின் இரண்டாம் பகுதியிலிருந்த கணணியிலிருந்து பரவியிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

அப்பகுதி தற்போது புகைமண்டலமாக காணப்படுவதுடன் இலங்கை மின்சார சபையினர் அப்பகுதிக்கான மின் இணைப்பினை துண்டித்துள்ளனர்.

You might also like