சுதந்திரபுரத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியவர்கள் கைது

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஒன்பது சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சாரதிகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்போது ஒன்பது உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சாரதிகளும், உழவு இயந்திரங்களும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நாளைய தினம் முன்னிலைப்படுத்த புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like