கிளிநொச்சியில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதியால் சிரமப்படும் மக்கள்

கிளிநொச்சி பல்லவராயன்கட்டுச் சந்தியிலிருந்து அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தி வரைக்குமான பிரதான வீதி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதுடன், இதனூடாகப் பயணிக்கின்ற வாகனங்கள், பொதுமக்கள் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

கிளநொச்சி பூநகரி மன்னார் வீதியையும் ஏ-9 வீதியையும் இணைக்கின்ற பிரதான வீதியாகவும் கிளநொச்சி மாவட்டத்தின் அதிக சனத்தொகையைக் கொண்ட கிராமங்களினதும் கிளிநொச்சி உப நகரத்தினதும் பிரதான வீதியாகக் காணப்படும் குறித்த வீதியானது, எந்த வித புனரமைப்புக்களுமின்றி பாரிய குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றது.

அதாவது பல்லவரான்கட்டுச் சந்தியிலிருந்து ஜெயபுரம், கரியாலை, நாகபடுவான், வனனேரிக்குளம், சோலை பல்லவராயன்கட்டு, ஐயனார்புரம், ஆனைவிழுந்தான், ஸ்கந்தபுரம், மணியங்குளம், சாலோம்நகர் உள்ளிட்ட அதிகளவான மக்கள் தொகை வாழ்கின்ற கிராமங்களின் பிரதான வீதியாகவும் குறித்த வீதி காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மொத்தச் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தப் பகுதியிலேயே வாழுகின்றனர்.

இந்த மக்கள் தமக்கான எந்த அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருந்தாலும் இந்த வீதியூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது.

குறித்த வீதியானது புனரமைக்கப்படாமையினால் இந்தப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அன்றாட போக்குவரத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

You might also like