யாழில் மாம்பழம் பறிக்கச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்!

மாம்பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறி விழுந்து காயமடைந்த குடும்பத் தலைவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இமையாணன் மேற்கு, உடுப்பிட்டியை சேர்ந்த இராசையா பத்மநாதன்(வயது 57)என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி தனது வளவினுள் உள்ள மாமரத்தில் ஏறி மாம்பழம் பறிக்க அவர் முயற்சித்துள்ளார். மரக் கொப்பு முறிந்ததில் கீழே விழுந்த அவர் மயக்கமடைந்தார்.

தேடி வந்த அவரது மனைவி கணவன் கீழே வீழ்ந்து மயக்கமடைந்து கிடப்பதை கண்டு உடனடியாக மந்திகை வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவரது மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

You might also like