யாழில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த மோசமான செயல்!

யாழ்.சிறைச்சாலைக்கு சவர்க்காரத்திற்குள் வைத்து கஞ்சா கொண்டு சென்ற குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்  யாழ்.சிறைச்சாலை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.சிறைச்சாலைக்கு தனது கணவரைப் பார்க்கச் சென்ற கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பரிசோதனை செய்த போது கணவனுக்காக கொண்டு வந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த பெண் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like