வவுனியாவில் இளைஞர் யுவதிகளுக்கு தொற்றா நோய் தொடர்பான செயலமர்வு

சுகாதார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் “திடகாத்திரமான இளைஞர்கள்” எனும் தொனிப்பொருளில் தொற்றா நோய் கட்டுப்பாடு தொடர்பில் இளைஞர் யுவதிகளை பயிற்றுவிக்கும் செயலமர்வு நேற்று (03.09.2017) ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.30 மணிக்கு பூந்தோட்டம் கால்நடை பயிற்சி நிலையத்தில் மாவட்டம் இளைஞர் சேவை அதிகாரி திரு. சுவானி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் அதிதிகளாக வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கேசவன் வவுனியா மாவட்ட தொற்றா நோய் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி . சுதர்சினி மாவட்ட நிஸ்கோ இணைப்பாளர் திரு. அமுதராஜ் ,வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு.சசிகரன் நெடுங்கேணி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு. ஐ.எம்.இப்ரான் செட்டிக்குளம் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு. நிரூசன் இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வானது 03/09/2017 தொடக்கம் 05/09/2017 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like