நீங்களும் முறையிடலாம் ! பஸ் நடத்­து­னர்கள் மிகுதிப் பணம் வழங்­கா­வில்லையா ?

மேல் மாகா­ணத்­திற்­குட்­பட்ட வீதி­களில்  சேவையில் ஈடு­படும் தனியார் பஸ்­களில், பய­ணி­க­ளுக்கு தொல்லை தரும் விதத்­தி­லான நிகழ்­வுகள் இடம்­பெற்றால், இது தொடர்பில் உட­ன­டி­யாக பய­ணிகள் முறைப்­பாடு செய்ய முடியும் என்று மேல் மாகாண பய­ணிகள் போக்­கு­வ­ரத்து அதி­கார சபை அறி­வித்­துள்­ளது

தனியார் பஸ்கள் தொடர்பில் பய­ணி­க­ளி­ட­மி­ருந்து அடிக்­கடி முறைப்­பா­டுகள் கிடைத்­த­வண்­ண­மி­ருப்­பதால், இது விட­யத்தில் கூடிய கவனம் எடுத்து, பய­ணி­க­ளுக்கு மிகச் சிறந்த போக்­கு­வ­ரத்துச் சேவை­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் நோக்­கி­லேயே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மேல் மாகாண பய­ணிகள் போக்­கு­வ­ரத்து அதி­கார சபையின் தலைவர் துசித்த குல­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

சில தனியார் பஸ் நடத்­து­னர்கள், பய­ணி­க­ளுக்கு டிக்கட் வழங்­கு­வ­தில்லை என்றும், டிக்கட் வழங்­கி­னாலும் சில நடத்­து­னர்கள் மீதி சில்­லறைக் காசு­களை சரி­யாக வழங்­கு­வ­தில்லை என்றும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

தனியார் பஸ் நடத்­து­னர்கள் தொடர்­பிலோ அல்­லது தனியார் பஸ்­களில் ஏதா­வது பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டாலோ, இது குறித்த முறைப்­பா­டு­களை உட­ன­டி­யாக அதி­கார சபையின் 011 55 59 595 என்ற இலக்­கத்­துடன் தொடர்­பு­கொண்டு தெரி­விக்க முடியும் என்றும் அதி­கார சபையின் தலைவர் குறிப்­பிட்­டுள்ளார்.

தனியார் பஸ்­களில் சகல பய­ணி­க­ளுக்கும் கட்­டாயம் டிக்கட் மற்றும் மிகுதிப் பணம்  வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தண்டனை வழங்கப்படுவதற்கான அதிகாரம், அதிகார சபைக்கு இருப்பதாகவும்  தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

You might also like