கிளிநொச்சியில் குளங்களை புனரமைப்பதில் பாரிய சிரமங்கள்: அபிவிருத்தி பணிகளும் தாமதம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களை புனரமைப்பதற்கான மண் எடுப்பதில் பாரிய சவால்கள் காணப்படுவதாகவும், இதனால் குளங்களை புனரமைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க உள்ளதாகவும் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் ஓர் விவசாய மாவட்டமாக காணப்படுகின்ற நிலையில் யுத்த காலத்தில் சேதமடைந்த கைவிடப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரக் குளங்களை புனரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனைவிட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள இரணைமடுக் குளம் உள்ளிட்ட ஒன்பது பாரிய குளங்களின் புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 480இற்கும் மேற்பட்ட குளங்களில் தற்போது மீள்குடியேற்ற அமைச்சினது நீதியொதுக்கீட்டின் கீழும் ஏனைய திணைக்கள மற்றும் அமைச்சினதும் நிதியொதுக்கீடுகளிலும் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குளத்தின் புனரமைப்புப் பணிகளுக்கான மண் எடுப்பதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பல்வேறு புனரமைப்புப் பணிகளும், அபிவிருத்தி பணிகளும் தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You might also like