மூன்றாம் தவணைக்கான பாடசாலை இன்று ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக ஐந்து பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் இந்தப் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு றோயல், கண்டி கிங்ஸ்வுட், கண்டி விஹாரமஹாதேவி, கண்டி ஸ்வர்னபாலி மற்றும் கண்டி சீதாதேவி ஆகிய பாடசாலைகள் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like