கணித வினாடி வினாப் போட்டியில் கிளிநொச்சி அணி சம்பியனானது

வடக்கு மாகாணக்கல்வித்திணைக்களத்தால் நடத்தப்பட்ட கனிஷ்ட பிரிவுக்கான மாகாண மட்ட கணித வினாடி வினாப் போட்டியில் கிளிநொச்சி வலய அணி முதலாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

நேற்று(05-09-2017) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற மேற்படி போட்டியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு கல்வி வலய அணிகளும் பங்கு கொண்டன. இப்போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான யாழ்ப்பாண வலய அணியினை வீழ்த்தி கிறிநொச்சி வலய அணி சம்பியனானது.

அத்துடன் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண அணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம்- 6 மாணவன் செல்வன் தெ.திருக்குமரன் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இம்மாணவன் அண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேசமட்டப் கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like