வவுனியா மகாறம்பைக்குளத்தில் பல வாழ்வாதார செயல்திட்டங்கள் வழங்கி வைப்பு

வவுனியா மகாறம்பைக்குளத்தில் லண்டனில் உள்ள வெளிச்சம் குடும்ப அறக்கட்டளை நிறுவனம் பல வாழ்வாதார செயல்திட்டங்கள், சக்கர நாற்காலிகள், மலசல கூட நாற்காலிகள், கோழிவளர்ப்பு மற்றும் ஒட்டும் தொழிலுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தனர் .

லண்டனில் இருந்து வருகை தந்த வெளிச்சம் குடும்பத்தினர் ஆசிரியரும் பிரபல சமூக சேவகருமான திரு கனகசபை ஜெயக்குமாரின் ஊடாக பயனாளிகளை தெரிவு செய்து அவர் தலைமையில் இந்நிகழ்வை நடத்தி வைத்தனர் .

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் ஆகியோருடன் லண்டனில் இருந்து வருகை தந்த திரு கண்ணன் திருமதி கீதா கண்ணன் , திரு பாலச்சந்திரன் திருமதி சாந்தி பாலச்சந்திரன் அவர்களின் பேரர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

You might also like