சற்று முன் பளையில் சக்திவாய்ந்த குண்டு! – மக்கள் வெளியேற்றம்

கிளிநொச்சி – பளை வேம்பொடுகேணி பகுதியில் அதி சக்திவாய்ந்த குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இரண்டு கிலோமீற்றருக்கு அப்பால் வெளியேற்றப்பட்டு, அதன் பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

பாரிய சேதத்தை ஏற்படுத்தும் வல்லைமைக் கொண்ட இக் குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையின் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுக்கும் வகையிலேயே, மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர், கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு எவ்வித சேதங்களும் இன்றி குண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.

You might also like