கிளிநொச்சியில் பூசாரியிடம் சென்ற வர்த்தகர் பரிதாபமாக மரணம்

கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் வர்த்தகர் ஒருவர் செய்வினையை அகற்றுவதற்காக சென்று உயிரிழந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கடன்சுமை அதிகமாகி விட்டதாக மனமுடைந்த இவர் ஆலயப் பூசகர் ஒருவரிடம் சென்றுள்ளார்.

இதன்போது, செய்வினை உள்ளதாக கூறிய பூசகர், அந்த செய்வினையை எடுப்பதற்கு ஒருவகை மருந்தை கொடுத்துள்ளார். இரு தினங்களுக்கு அதை குடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறித்த வர்த்தகருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதை பூசாரியிடம் தெரிவித்த போது, “அது செய்வினை அகலுவதற்கான அறிகுறி” என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து வர்த்தகருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர்கள் துரிதமாக செயற்பட்ட போதும் இவருக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதையடுத்து குறித்த வர்த்தகர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதில் ஜெயந்திநகர் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஆதித்தகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னடுத்து வருகின்றனர்.

You might also like