கிளிநொச்சியில் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள்

கிளிநொச்சியில் 212பேருக்கு புற்றுநோய்க்கான கொடுப்பனவுகளும், 174பேருக்கு சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதாக மாவட்ட சமூக சேவை திணைக்கள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினாலும் ஏனைய வழிகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் மாவட்ட சமூக சேவை திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 212 பேருக்கும், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட 174 பேருக்கும், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட 192 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், காச நோயினால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கும், தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட 06 பேருக்கும், தொழு நோயினால் பாதிக்கப்பட்ட 02 பேருக்கும் நோய்க்கான உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலகப் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like