இலங்கை பூராகவும் இலவச இணைய வசதியை வழங்க நடவடிக்கை

இலங்கை பூராகவும் இலவச வை-பை வசதி வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை மேம்படுத்துதல் மற்றும் உறவுகளை வளர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலவச வை-பை வசதி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
அதற்கமைய இலவச வை-பை வழங்கும் மண்டலங்களை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொருளாதார டிஜிட்டல் அளவை அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் இணைய வசதி வழங்குவது அவசியம் என்பதனால், சந்தை மற்றும் கட்டுப்பாடுகளுக்கான தடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட வளமான நாடு V2025 மாநாட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like