​வவுனியாவில் வீதியினை மறித்து ஆர்ப்பாட்டம் : பொலிஸாரால் இருவர் கைது

வவுனியா நகரசபை ஊழியர்களால் இன்று (20.01.2017) வீதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்களின் பொருட்களை பறிமுதல் செய்து வவுனியா நகரசபைக்கு ஏற்றிச் சென்றனர்.

இதனையத்து வீதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இரு வர்த்தகர்கள் பறிமுதல் செய்த மரக்கறிகளை மீள தருமாறு கோரி ஹோரவப்பத்தானை வீதியின் நடுவில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் வாகன நேரிசல் ஏற்ப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இரு வர்த்தகர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரனை நடத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like