முல்லைத்தீவில் திடீரென எழுந்தது கடல் காற்று..!

முல்லைத்தீவு வடகிழக்கு பக்கம் வங்கக்கடலில் திடீரென எழுந்த காற்று கரையோரப்பகுதிகளை தாக்கிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இன்று காலை ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரையிலும் கரைக்குத் திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவர்களுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்த முடிவதாக கரையில் உள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

எதுவாயினும் அவர்கள் கொண்டு சென்ற எரிபொருளானது கரை திரும்பும் அளவிற்கு மட்டுமே போதுமானதாக இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடுக்கடலில் நிற்கும் மீனவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு தற்பொழுது கரையில் இருந்து படகை நடுக்கடலுக்கு கொண்டு செல்ல முடியாத சூழலும் காணப்படுகின்றது.

எனினும் காலநிலையில் ஏற்பட்ட சிறு மாறுதல் காரணமாகவே இவ்வாறு காற்று எழுந்துள்ளது. சிலமணிநேரங்களில் அது தனிந்து விடும். எனவே அச்சப்படத்தேவை இல்லை என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like