வவுனியா பேருந்து நிலையத்தில் கலவரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகளிடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக மூவரை கைது செய்துள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே கலவரம் காரணமாக பொலிஸார் அரச பேருந்து நிலையத்தில் பணியாற்றி நேரக்கணிப்பாளர் ஒருவரையும் அன்றைய கலவரத்தின்போது வீதியில் அமர்ந்து பேருந்தினை செலுத்த இடம்கொடுக்காமலும் பேருந்தின் கண்ணாடி மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்து தனியார் பேருந்து சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களை நேற்று முன்தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like