கிளிநொச்சியில் உவர் நிலங்களாக மாறியுள்ள பயிர்ச்செய்கை நிலங்கள்

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உவர் நீர் தடுப்பணைகள் சேதமடைந்தமையால் சுமார் ஆறாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்லவராயன்கட்டு, கரியாலை, நாகபடுவான், குமுழமுனை, நொச்சிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள உவர் நீர்த் தடுப்பணைகள் கடந்த கால யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் அப்பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் கடல்நீர் உட்புகுந்து கடந்த காலங்களில் விவசாயச் செய்கை நிலங்களாக காணப்பட்ட பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

இவ்வாறு உவர் நீர்த் தடுப்பணைகள் அழிவடைந்து உவர் நீர் உட்புகுந்தமையால் சுமார் ஆறாயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

You might also like