வவுனியாவில் சர்வதேச சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் சமாதானப் பேரணி

சர்வதேச சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் வவுனியாவில் சமாதானப் பேரணி நேற்று (09.09.2017) (சனிக்கிழமை) நடைபெற்றது.

மக்கள் மத்தியில் சமாதான நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கையை நாட்டில் அமுல்படுத்தும் விழிப்புணர்வு செயற்பாடாக மேற்படி சமாதானப் பேரணி இடம்பெற்றுள்ளது.

பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் வவுனியா பட்டானிச்சூர் பகுதியிலிருந்து மன்னார் வீதி, ஏ9 வீதி, கண்டிவீதி ஆகிய வீதிகள் ஊடாக வவுனியா சைவபிரகாசா மகளிர் கல்லூரி முன்பாக இப்பேரணி வந்தடைந்தது.

சர்வதேச சமாதானப் பேரவையில் வட.மாகாண இணைப்பாளர் சரண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமாதானப் பேரவையினர் உட்பட மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like