வவுனியா மிருக வைத்தியரின் அசமந்த போக்கால் பசுவும் கன்றும் இறப்பு.!

வவுனியா மகாறம்பைகுளத்தில் வாழ்வாதாரத்திற்கான பயன்படுத்திவந்த பசு மிருக வைத்தியரின் அசமந்த போக்கால் இறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மகாறம்பைக்குளம் கல்வெட்டுசந்தி பிரதேசத்தை சேர்ந்த  ஓர் குடும்பத்தின் பசு மாடு ஒன்று கடந்த (16)ம் திகதி காலை 10 மணியளவில் கன்று ஈனுவதற்காக இருந்த போதும் அது ஈனவில்லை. கன்று இடையில் நின்று விட்டது. உடனடியாக மிருக வைத்தியரை நாடியும் அவசரமாக வர வேண்டும் என்று விடயத்தை கூறியும் அதனை பொருட்படுத்தவில்லை. பல மணி நேரம் மிருக வைத்தியசாலையில் காத்திருந்த குடும்பத்தவர் வீடு சென்றுவிட்டார். மாலை 3.00 மணியளவில் பசு இறந்துவிட்டது. இதுவரையும் மிருக வைத்தியர் வரவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தவர் கருத்து தெரிவிக்கையில் இறந்த பசுவிலிருந்து ஒரு நாளைக்கு 6 லீட்டர் பால் கறந்து கொடுப்பதாகவும், வாழ்வாதாரமாக பசுவை நம்பியே வாழ்ந்து வருகின்றோம். இப்படியான வைத்தியர்கள் இருக்குமட்டும் நாம் மீண்டும் மீண்டும் கஷ்ரத்தின் மத்தியிலே வாழ வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். இது போல் வேறு யாருக்கும் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக இன்று (20)  மிருக வைத்தியரை (பெண் வைத்தியரை) தொடர்பு கொண்டு வினவிய போது  ஊடகத்திற்கு நான் பதில் கூற வேண்டிய அவசியமில்லை எனவும் அலட்சிய போக்கில் பதிலளித்தார்.

You might also like