மாத்தளையில் பெற்ற தாயை புகையூட்டிக் கொல்ல முயன்ற மகன்; தாய் மகனுக்காக என்ன செய்தார்?

ஸ்ரீலங்காவின் தம்புள்ளை பிரதேசத்தில், நபர் ஒருவர் தனது பெற்ற தாயை அறையொன்றினுள் பூட்டி வைத்து வாகனப் புகையால் கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அறையினுள் பூட்டியபின் டிப்பர் வகன புகையை குறித்த அறைக்குள் புக விட்டு அதன்மூலம் கொலை செய்ய முயற்சித்த சம்பவமே இடம்பெற்றிருக்கிறது.

மாத்தளை மாவட்டம் தம்புள்ளை பன்னம் பிட்டிய பிரசேத்தில் வழும் 75 வயதான தாயொருவரின் கடைசி மகனே இந்தச் செயலைப் புரிந்துள்ளார்.

குறித்த நபர் தனது தாயை அந்த அறைக்குள் பூட்டி வைத்து டிப்பர் வாகனத்தின் கரும்புகையை அறைக்குள் விட்டுள்ளார். இதனால் அந்த தாய் பெரும் சத்தத்துடன் அலறியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் பெண்ணொருவர் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிபத் தாயின் உடல் முழுவதும் கறுப்பு புகை இருந்ததோடு வைத்தியசாலையில் அவரை குளிப்பாட்டி சுத்தம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக குறித்த தாயிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட தாய் தனது மகனுக்கு தண்டனை எதுவும் வழங்க வேண்டாம் என பொலிஸாரிடம் கேண்டுக் கொண்டுள்ளார்.

You might also like