இர­ணை­தீ­வி­லுள்ள 189 ஏக்கர் காணி நாளை மறு­தினம் அளக்­கப்­படும்

இர­ணைத்­தீவில் கடற்­ப­டையால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய காணி­களில் 189 ஏக்கர் காணியை அளந்து மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு  கடற்­படை நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக   தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  எஸ்.சிறி­தரன்  தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இர­ணை­தீவு மக்கள் கடற்­ப­டையால் அப­க­ரிக்­கப்­பட்ட தமது சொந்தக் காணி­களில் குடி­யே­ற­வே­ண்டும் என தொடர்ச்­சி­யாக  கோரி­வ­ரு­கின்­றனர்.  அதற்­க­மை­வாக அண்­மையில்  முழங்­காவில் கடற்­படை முகாமில் பாது­காப்பு  இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்­தன தலை­மையில் விசேட கூட்டம் ஒன்று இடம்­பெற்­றது. அதில் முதற்­கட்­ட­மாக இர­ணை­தீ­வி­லுள்ள 189 ஏக்­கரை அள­வி­டு­வ­தற்கு கடற்­படை இணங்­கி­யுள்­ளது. இது இரணை தீவு மக்­க­ளுக்குக் கிடைத்த முதல் வெற்­றி­யாகும்.

அதன்­பி­ர­காரம் நில­அ­ளவைத் திணைக்­க­ளத்­து­டனும்  அது சார்ந்த வேறு நிறு­வ­னங்­க­ளு­டனும் இணைந்து  கடந்த வார­ம­ளவில் காணி அளப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் இடம்­பெற்­ற­போதும் அது நிறுத்­தப்­பட்­டது. ஆனால், நாளை மறு­தினம் செவ்­வாய்க்­கி­ழமை முதற்­கட்­ட­மாக காணிகள் அளக்­கப்­படும்.

இவ்­வாறு காணி அளக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்டால் அந்த மக்­களும் இர­ணைத்­தீ­வி­லேயே மீன்­பி­டிக்கச் செல்­ல­மு­டியும். அங்கு ஒரு ராடார் கரு­வியை பொருத்­தி­விட்டு  அதன் கதிர்­வீச்­சுக்கள் மக்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என கடற்­ப­டை­யினர்  சாக்குப் போக்குச் சொல்லி வரு­கின்­றார்கள்.  ஆனால்,  கடற்­ப­டை­யி­னரும் அந்த ராடார் கதிர்­வீச்சு படும் இடங்­க­ளில்தான் பணி­களை மேற்­கொண்­ட­வாறு இருக்­கின்­றனர். ஆகவே,  இந்த ராடார் அங்கு ஒரு பிரச்சினையாகக் காணப்படாது. அவ்வாறு காணி விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேறினால் மக்கள் அங்கு சென்று மீன்பிடியில் ஈடுபட  முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

You might also like