சற்று முன் வவுனியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (20.01.2017) மாலை 4மணியளயவில் ஒன்றினைந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு  வடமாகாணசபை உறுப்பினர் செ.மயுரன் அவர்களும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகர் சந்திரகுலசிங்கம் மோகன்  , சிறீ ரெலோ கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் கார்த்திக் இளைஞர்களுடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மாட்டு இனங்களைப் பாதுகாப்போம், தடை அதை உடை, ஜல்லிக்கட்டு நம் இனத்தின் அடையாளம், காப்போம் காப்போம் மாட்டைப்பாதுகாப்போம், தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம்,  போன்ற வாசகங்களுடன் கோசங்களை எழுப்பியவாறு பெருமளவான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like