வவுனியாவில் மக்களின் தேவைகளை இலகுபடுத்தும் வகையில் நடமாடும் சேவை

சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடமாடும் சேவை  நடைபெற்று வருகிறது.

இன்று (10.09.2017) காலை தொடக்கம் மாலை வரை வவுனியா இலங்கை திருக்கலவன் பாடசாலையில் மக்களின் தேவைகளை இலகுபடுத்த நடைபெற்ற இந் நடமாடும் சேவையில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பிறப்பு சான்றிதழ் மொழிபெயர்ப்பு மற்றும் புதிதாக பெற்றுக்கொள்ளல், விவாகமாகாத தம்பதியினருக்கு புதிதாக விவாகம் செய்து வைத்தல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை, அரச காணி மற்றும் கமநல சேவை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு, ஒய்வூதியம், நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு போன்ற பல்வேறு சேவைகளை மக்கள் பெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் பிரத்தியேக செயலாளர் பிரியான் குணவர்த்தன, அமைச்சின் மேலதிக செயலாளர் திலகரட்ன, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஞ்சிதா வியாங்கொட, உதவி செயலாளர் சி. மதிவாணன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உதவி பிரதேச செயலாளர் சாரதாதேவி மற்றும் அரச ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like