வவுனியா நெளுக்குளம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை 24மணிநேரத்தில் மூவர் கைது

வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (10.09.2017) மாலை 3.30 மணியளவில் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நபரை வவுனியா நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணேசபுரம் பகுதியிலிருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த நபரிடம் கேரளா கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நெளுக்குள பொலிஸ் பொறுப்பதிகாரி எ.எம்.எஸ்.அத்தநாயக்க தலமையிலான குழுவினர் குறித்த நபரை சோதனையிட்ட போது உடமையுடன் மறைத்து வைத்திருந்த கேரளா கஞ்சா பொதியினை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் 29வயதுடையவர் எனவும் எங்கிருந்து இவர் கஞ்சாவினை பெற்றுக்கொண்டார் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்தினுடாக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இன்றைய தினம் மதியம் குழுமாட்டுச்சந்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு முன்பாக மதுபோதையில் அட்டசாகம் செய்த இருவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like