விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்ட புல்டோசர் வாகனத்தின் இன்றைய நிலை

ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குலின் போது இராணுவத்தினரிடம் இருந்து விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்ட கனரக புல்டோசர் வாகனம் ஒன்று இராணுவ வெற்றி நினைவாலயமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நினைவாலயத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவு பெருஞ் சமரின் போது இராணுவத்தினர் அவசர காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி இந்த புல்டோசர் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதேவேளை அவ்விடத்தில் இரண்டு போராளிகள் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் 2009 ஆண்டிற்கு பின்னர் இலங்கை இராணுவத்தினர் இந்த புல்டோசர் வளாகத்தை இராணுவ வெற்றி நினைவாலயமாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1991 ஆம் ஆண்டு யூலை மாதம் 13ஆம் நாள் ஆனையிறவு படை முகாமை தாக்கி அழிப்பதற்காக விடுதலைப் புலிகளின் கரும்புலி அணியினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட இந்த புல்டோசரில் நகர்ந்து சென்றுள்ளனர்.

இதன் போது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணி இராணுவ வீரர் கோப்ரல் காமினி குலரத்ன என்பவர் கைக்குண்டுத் தாக்குதல் மூலம் புலிகளின் நகர்வை முறியடித்து தன் உயிரை தியாகம் செய்துள்ளதாக இராணுவத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like