வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் இராணுவச்சீருடை மீட்பு

வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் இன்று காலை 10 மணியளவில் இராணுவத்தினர் பயன்படுத்தும் இராணுவச்சீருடை வீதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (11.09) காலை வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் 9ஆம் ஒழுங்கையில் வீதியில் இராணுவச்சீருடையில் விஷேட அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் குறித்த இராணுவச்சீருடை மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதனடிப்படையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like