வவுனியாவில் வாள்வெட்டிய குழுவினர் தொலைபேசியில் மிரட்டல்

வவுனியா குருமன்காடு புகையிரதவீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றினுள் கடந்த ( 03.09) வாள்களுடன் உள்புகுந்த குழுவொன்று இளஞ்செழியனை போடப்போன எங்களுக்கு நீ எம்மாத்திரம் என கூறி உரிமையாளரையும் வெட்டியதுடன், வீதியால் சென்றவர்களையும் வழிமறித்து கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றது.

ஆனால் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை பொலிசார் இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றையதினம் (10.09) மாலை 5..30 மணியளவில் குறித்த வலுவூட்டல் நிலைய முகாமையாளருக்கு புதிய, புதிய தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பை ஏற்படுத்தி பொலிஸ் முறைப்பாட்டினை (வழக்கிலிருந்து ) விலக்குமாறு இல்லாதவிடத்து மேலும் மேலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என, குறித்த நபர்கள் மிரட்டியுள்ளனர்.

இவ் மிரட்டல் அழைப்பு தொடர்பாக நேற்று இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like