வவுனியாவிற்கு அதிக வீடுகள் வேண்டும்: ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் தீர்மானம்!

வவுனியாவிற்கு அதிகப்படியான வீடுகள் தேவைப்படுவதனால் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு கடிதம் அனுப்புவதாக மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதியினால் 65000 வீடுகள் வழங்கம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியாவிற்கும் அதிகமான வீடுகள் தேவையாகவுள்ளது என வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் நேற்று (11.09.2017) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட இணைத்தலைவரான அமைச்சர் ரிசாட் பதியுதீன் வவுனியாவில் தேவையான வீடுகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தீர்மானமாக ஏற்றுக்கொள்கின்றது.

எனவே அதிகபடியான வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு மாவட்ட செயலகம் ஊடாக கடிதம் அனுப்புமாறும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

You might also like